Sidhariyal

2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன? (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

.

முப்பால் அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப் பால் இதில் வரும் பால் ! அது என்ன பால்! பால் கடல் ! நம் முன்னோர்கள் விண் வெளியை பால் கடலாகத் தான் பார்த்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் milky Way என்றார்கள். நாம் இருக்கக் கூடிய இந்த அண்டம் பால்வெளி அண்டம் எனப்படும். அந்த பால் வெளி அண்டத்தின் கணக்குகள் , இந்த திருக்குறளில் எண்களாக இருப்பதைத் தான் முப்பால்களாக குறித்துள்ளார். அந்தப்பால் வெளி அண்டத்தில் நீந்தும் மீண்களாக விண்மீன்களாக்கினார்கள். அவை மூன்று தமிழ்ச் சங்கங்களின் குறியீடுகள் தான். அறம் பொருள் இன்பம். இதில் நடுவில் உள்ள பொருள் தான் முதல். அறம் இரண்டாவது இன்பம் மூன்றாவது. நம் உடல், கடல், மண், விலங்குகள், மரம், செடி, கொடிகள், சூரியன், நிலா என கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பெருட்கள் தான். இந்த பொருட்கள் அனைத்துமே காலம் இல்லா காலத்தில் அதிர்வாக (information) எடை இல்லாதைவகளாக இருந்தவைதான். வெடித்து மலர்ந்து எடை உள்ள பொருட்களானவை. இந்த பொருட்கள் தான் எட்டு வகையான சக்திகளின் உதவியால் இயங்கிக் கொண்டு உள்ளது. பொருட்கள் அனைத்தும் சிவம். அவை சக்திகளின் உதவியால் உடல்களாகி இயங்கிக் கொண்டு உள்ளது. ஆகவே இந்த சக்திகள் இயங்க ஆதாரமானவை பொருட்களான சிவம். எனவே அதை நடுவில் வைத்தார். அந்த பொருட்களை அறம் சார்ந்த வகையில் பயன்படுத்தினால் தான் இன்பமாக வாழ முடியும் என்பதை பொருளின் வலது புறமாக அறத்தையும். இடது புறத்தில் இன்பத்தையும் வைத்தார். ஏனெனில் நம் மூன்று தமிழ்ச்சங்கங்களும் மூன்று வெவ்வேறு காலச் சூழ்நிலைகளில் உயிர்பெற்று நம் அண்டத்தை அலசி ஆராய்ந்தார்கள். முதல் தமிழ்ச் சங்கம் குமரிக் கண்டத்தில் , நமக்கெல்லாம் இயற்கையின் இறைத்தன்மைகளை உணர்த்தி நான்கு வேதங்களாக்கி கொடுத்த ஆதியோகி சிவன் வழிநடத்தியது. இரண்டாம் தமிழ்ச்சங்கம் நமக்கு அறம் சார்ந்த வாழ்வியலை உருவாக்கி, நம்மை குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது, நம்மை காவடியில் பொருட்களை வைத்து நடத்தி இலங்கையில் கபாடபுரத்தில் தண்டு இறக்கி , . மருத நிலத்தை உருவாக்கி மறமும் ஒரு அறம்தான் என நம்மை வழிநடத்திய முருகன் தலைமையில் நடந்தது. மூன்றாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரத்திலிருந்து இரண்டாம் ஊழிக்குப் பின் பூம்புகார் மூழ்கிய போது பொதிகை மலைக்கு மாற்றி பின் மதுரைக்கு மாற்றி , வழிநடத்திய கருத்தினர் (கருப்பன்னன்) இந்த கலி காலத்தில் வாழ்வியலை எப்படி அறம்சார்ந்த வாழ்வியலில் இன்பமாக வாழ்வது என மகாபாரதப் போர் முடிந்து இன்று வரை நம்மை வழி நடத்திய இன்பத்துக்குச் சொந்தக்காரர் கிருட்டினன் நினைவாக இன்பத்துப் பால். ஆயர்பாடி கண்ணன். 19,000 மாடுகளுக்குச் சொந்தக் காரணனான திரு வில்லிப்புத்தூரைச் சேர்ந்த கிருட்டினனுக்குத் காகத் தான் இன்பத்துப் பால். இப்படி இந்த முப் பாலிலும் நம் வரலாற்றை நிலை நிறுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். தொடரும்.

Related Posts