Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
166. கோசமாய் எழுந்ததும், கூடுறுவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே! ஈசனார் இருந்திடம், அநேக அநேக மந்திரம். ஆசனம் நிறைந்து நின்ற 51 எழுத்துமே.
சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

ஆ காயம் , காற்று, வெப்பம், நீர் எனும் நான்கும் கோசமாய் உயிர் பெற்று எழுந்ததும், கருமுட்டை எனும் கூடு உருவி நின்றதும், வளர்ந்து தேகமாய் பிறந்ததும், இந்த பஞ்ச பூதங்களான சிவாய அஞ்செழுத்துமே. ஈசனார் என்றால் இந்த ஐம்பூதங்களில் உடலாய் மாறுவ…

சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து
165. நாலொடாறு பத்து மேல், நாலும் மூன்றும் இட்டபின், மேலும் பத்தும் ஆறுடன் , மேவி அண்ட தொன்றுமே! கூவி அஞ்செழுத்துலே, குரு விருந்து கூறிடில் தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே!
சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு
164. சதுரம் நாலு மறையும் இட்டு, தான தங்கி மூன்றுமே!.. எதிரான வாயுவாறு என்னும் வட்ட மேவியே. உதிரந்தான் மறைகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்| கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதமே!
சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்
162. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்ற தேயுவில். உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது அப்புவில். அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில் திருக்கருத்துக் கொண்டத சிவாயம் என்று கூறுமே !.
சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்
161. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்றது எவ்விடம்.? உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது எவ்விடம்.? அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்? திருக்கருத்துக் கொண்டதோ? சிவாயம் என்று கூறுவீர்.
சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற
160. நெற்றியில் இயங்குகின்ற நீளமாம் விளக்கினை, உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியை, பக்தியில் தொடர்ந்தவர், பரமபதம் அதானவர், அத்தலத்தில் இருந்த பேர்கள், அவர் எனக்கு நாதனே !
சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு
159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.
சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற
158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.
சிவவாக்கியம் பாடல் 157 – பார்த்தது ஏது
157. பார்த்தது ஏது பார்த்திடில், பார்வை ஊடு அழிந்திடும். கூத்ததாய் இருப்பிரேல், குறிப்பில் அச் சிவம் அதாம். பார்த்த பார்த்த போதெலாம், பார்வையும் இகந்து நீர். பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர், பிறப்பிலே.
சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?
156. அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?. புக்கிருந்த பூதமும், புலன்களும் அனாதியோ? தர்க்கமிக்க நூல்களும், சாத்திரம் அனாதியோ? தர்ப் பரத்தை ஊடறுத்த , சற்குரு அனாதியோ?
சிவவாக்கியம் பாடல் 155 – ந வ்வும், ம வ்வையும்
155. ந வ்வும், ம வ்வையும், கடந்து, நாடொனாத சி யின் மேல், வ வ்வும், ய வ்வுளும், சிறந்த வண்மையான பூதகம், உ வ்வு சுத்தி உன் நிறைந்த குச்சி ஊடு உருவியே, இவ் வகை அறிந்த பேர்கள் , ஈசன் ஆனை ஈசனே !