Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 154 – ஐயன் வந்து
154. ஐயன் வந்து மெய் அகம் புகுந்தவாறு தெங்கனே! செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே ! ஐயன் வந்து மெய்யகம், புகுந்து கோயில் கொண்ட பின், வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே!
சிவவாக்கியம் பாடல் 153 – அக்கிடீர் அனைத்து
153. அக்கிடீர் அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நிற்பது. முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்து விட்டது. மயக்கிடீர் பிறந்து இருந்து மாண்டு மாண்டு போவது, ஒக்கிடீர் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே !
சிவவாக்கியம் பாடல் 152 – ஆட்டு இறைச்சி
152. ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், ஆட்டு இறைச்சி அல்லவோ? யாகம் நீங்கள் ஆற்றலின். மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், மாட்டிறைச்சி அல்லவோ? மரக்கறிக்கு இடுவது.
சிவவாக்கியம் பாடல் 151 – மீன் இறைச்சி
151. மீன் இறைச்சி தின்றதில்லை, அன்றும் இன்றும் வேதியர், மீன் இருக்கும் நீரலல்லவோ? முழுகுவதும், குடிப்பதும். மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், மான் உரித்த தோலல்லோ? மார்பு நூல் அணிவதும்.
சிவவாக்கியம் பாடல் 150 – பிணங்குகின்றதேதடா?
150. பிணங்குகின்றதேதடா? பிரங்ஙை கெட்ட மூடரே? பிணங்கிலாத பேரொளி , பிராணனை அறிகிலீர். பிணங்குமோ? இரு வினை, பிணக்கறுக்க , வல்லீரேல். பிணங்கிலாத பெரிய இன்பம், பெற்றிருக்கலாகுமே!
சிவவாக்கியம் பாடல் 149 – நாடி நாடி
149. நாடி நாடி உம்முளே நயந்து கான வல்லீரேல். ஓடி ஓடி மீளுவார், உம்முளே அடங்கிடும், தேடி வந்த காலனும், திகைத்திருந்து போய் விடும். கோடி காலம் உம் முகம் இருந்த வார தெங்கனே!
சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு
148. செம்பினிற் கழிம்பு வந்த சீதரங்கள் போலவே, அம்பினில் எழுதொனாத வனியரங்க சோதியை, வெம்பி வெம்பி வெம்பியே, மெலிந்து மேல் கலங்கிட, செம்பினில் கழிம்பு விட்ட சேதியது காணுமே!
சிவவாக்கியம் பாடல் 147 – மூலமாம் குளத்திலே
147. மூலமாம் குளத்திலே, முளைத்தெழுந்த கோரையை, காலமே எழுந்திருந்து, நாலு கட்டு அறுப்பீரேல். பாலனாகி வாழலாம், பரப்பிரம்மம் ஆகலாம், ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மைபாதம் உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 146 – சாவல் நாலும்
146. சாவல் நாலும் , குஞ்சதஞ்சும், தாயதானவாரு போல், காவலான கூட்டிலே, கலந்து சண்டை கொள்ளுதே!.. கூவமான கிழ நரி அக் கூட்டிலே புகுந்த பின், சாவல் நாலும் குஞ்சதஞ்சும், தானிறந்து போனதே!
சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில்
145. ஈனெருமையின் கழத்தில் இட்ட பொட்டனங்கள் போல், மூனு நாலு சீலையில், முடிந்து, அவிழ்க்கும் மூடர்காள். மூனு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை, ஊனி ஊனி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த
144. ஓதி வைத்த நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும், மாது மக்கள் சுற்றமும், மறக்க வந்த நித்திரை, ஏது புக்கொழித்ததோ? எங்கும் ஆகி நின்றதோ? சோதி புக்கொழித்த மாயம் , சொல்லடா சுவாமியே!
சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை
143. உண்ட கல்லை எச்சிலென்று , உள் எரிந்து போடுறீர். பண்டும் எச்சில் கையெல்லே, பரமனுக்கும் தேறுமோ! தண்ட எச்சில் கேளடா ? கலந்த பாணி அப்பிலே ! கொண்ட சுத்தம் ஏதடா? குறிப்பில்லாத மூடரே!