சிவவாக்கியம் பாடல் 193 – உருக்கலந்த பின்னலோ
193. உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது.
இருக்கிலென் மறக்கிலென் நினந்திருந்த போதெலாம்.
உருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ.
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே!!!
சிவவாக்கியம் பாடல் 192 – பூவும், நீரும்
192. பூவும், நீரும் என் மனம். பொருந்து கோயில் என் உளம்.
ஆவியோடு லிங்கமாய் அகண்டமெங்கும் ஆகிடும்.
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் ,
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே !.
சிவவாக்கியம் பாடல் 191 – சுக்கிலத் திசையுளே
191. சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுர வெட்டுளே மூலாதார அறையிலே
அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே!!
சிவவாக்கியம் பாடல் 190 – மூலவட்டம் மீதிலே
190. மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோல வட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்ற நீர்
ஞால வட்டம் மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே!!!
சிவவாக்கியம் பாடல் 189 – அருக்கனோடு சோமனும்
189. அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்க வல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே!
சிவவாக்கியம் பாடல் 188 – முட்டு கண்ட
188. முட்டு கண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று கட்டும் அற்று முடிவில் நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்த வீடதாகுமே !!!
சிவவாக்கியம் பாடல் 187 – வேடமிட்டு மின்
187. வேடமிட்டு மின் துலக்கி மிக்க தூப தீபமாய்,
ஆடறுத்து கூறு போட்ட அவர்கள் போல பண்ணுகிறீர்.
தேடி வைத்த செம்பலாம் திரள்பட பரப்பியே,
போடுகின்ற புச்ப பூசை பூசை என்ன பூசையோ!
சிவவாக்கியம் பாடல் 186 – துருத்தியுண்டு கொல்லருண்டு
186. துருத்தியுண்டு கொல்லருண்டு , சொர்ணமான சோதியுண்டு.
திருத்தமாய் மனசில் உண்ணி திகல ஊத வல்லீரேல் ,
விருத்த தூணில் அங்கியே பிளம்ப தாய் விரித்திடும் ,
திருத்தமான சோதியும் தீயும் அல்ல தில்லையே!
சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
185. பிறந்த போது கோவணம் , இலங்கு நூலும் குடுமியும் ,
பிறந்துடன் பிறந்ததோ ?
பிறந்து நாள் சடங்கெலாம்,
மறந்த நாலு வேதமும் , மனதுலே உதிக்கவோ,
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரேல்.
சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம். இப்பொழுது சூரியன் கார்த்திகை மாதம் துலாம் ராசியில் தெரிகிறது என்றால் பூமி மேசராசியில் பயணிக்கிறது என அர்த்தம். சனி கும்பத்தில் வக்கிரத்தில் உள்ளது. …
சிவவாக்கியம் பாடல் 184 – ஓதொனாமல் நின்ற நீர்
184. ஓதொனாமல் நின்ற நீர், உறக்கம் ஊனும் அற்ற நீர்.
சாதி பேதம் அற்ற நீர். சங்கை அன்றி நின்ற நீர்.
கூவிலாத வடிவிலே, குறிப்புணர்த்த நின்ற நீர்.
ஏதுமின்றி நின்ற நீர். இயங்குமாறு தெங்கனே ?
சிவவாக்கியம் பாடல் 183 – அன்னமிட்ட பேரெலாம்
183. அன்னமிட்ட பேரெலாம் அனேக கோடி வாழவே,
சொர்ணம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்.
பின்னம் இட்ட பேரெலாம் வீழ்வர் வீண் நரகிலே,
கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்று தின்னமே!