சிவவாக்கியம் பாடல் 149 – நாடி நாடி
149. நாடி நாடி உம்முளே நயந்து கான வல்லீரேல்.
ஓடி ஓடி மீளுவார், உம்முளே அடங்கிடும்,
தேடி வந்த காலனும், திகைத்திருந்து போய் விடும்.
கோடி காலம் உம் முகம் இருந்த வார தெங்கனே!
சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு
148. செம்பினிற் கழிம்பு வந்த சீதரங்கள் போலவே,
அம்பினில் எழுதொனாத வனியரங்க சோதியை,
வெம்பி வெம்பி வெம்பியே, மெலிந்து மேல் கலங்கிட,
செம்பினில் கழிம்பு விட்ட சேதியது காணுமே!
சிவவாக்கியம் பாடல் 147 – மூலமாம் குளத்திலே
147. மூலமாம் குளத்திலே, முளைத்தெழுந்த கோரையை,
காலமே எழுந்திருந்து, நாலு கட்டு அறுப்பீரேல்.
பாலனாகி வாழலாம், பரப்பிரம்மம் ஆகலாம்,
ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மைபாதம் உண்மையே!
கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
கடந்த 1800 ஆண்டுகளாக , கலிகாலத்தின் கோரப் பிடியில் இருந்த தமிழகத்தில் , நம் பாட்டன்கள் எவ்வளவு இன்பமாக , இயற்கையை புரிந்து கொண்டு , எளிமையாக வாழ்ந்து , எழுச்சியான வீரத்துடன், இயற்கையான சூழலில், இயற்கையை எப்படி கவனிக்க வேண்டும் என…
மகர சங்கராந்தி
நம் நடைமுறையில் உள்ள திருத்தப் படாத நாட்காட்டி , 24 + 6 = 30 நாட்கள் பின் தங்கி உள்ளது போல் ஆங்கில நாட்காட்டியும் 6 நாட்கள் பின் தங்கி உள்ளது. 425 ஆண்டுகளுக்கு முன்னாள் அவர்கள் நாட்காட்டியில் 10 நாட்களை கூச்சமில்லாமல் நகர்த்தி விட்டு மறு…
சிவவாக்கியம் பாடல் 146 – சாவல் நாலும்
146. சாவல் நாலும் , குஞ்சதஞ்சும், தாயதானவாரு போல்,
காவலான கூட்டிலே, கலந்து சண்டை கொள்ளுதே!..
கூவமான கிழ நரி அக் கூட்டிலே புகுந்த பின்,
சாவல் நாலும் குஞ்சதஞ்சும், தானிறந்து போனதே!
சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில்
145. ஈனெருமையின் கழத்தில் இட்ட பொட்டனங்கள் போல்,
மூனு நாலு சீலையில், முடிந்து, அவிழ்க்கும் மூடர்காள்.
மூனு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை,
ஊனி ஊனி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த
144. ஓதி வைத்த நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும்,
மாது மக்கள் சுற்றமும், மறக்க வந்த நித்திரை,
ஏது புக்கொழித்ததோ? எங்கும் ஆகி நின்றதோ?
சோதி புக்கொழித்த மாயம் , சொல்லடா சுவாமியே!
சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை
143. உண்ட கல்லை எச்சிலென்று , உள் எரிந்து போடுறீர்.
பண்டும் எச்சில் கையெல்லே, பரமனுக்கும் தேறுமோ!
தண்ட எச்சில் கேளடா ? கலந்த பாணி அப்பிலே !
கொண்ட சுத்தம் ஏதடா? குறிப்பில்லாத மூடரே!
சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்
142. உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்,
இதரமாய் இருந்த தொன்று இரண்டு பட்ட தென்னலாம்,
மதரமாக விட்ட தேது மாங்கிசம் புலால் அதென்று,
சதுரமாய் வளர்ந்த தேது சைவரான மூடரே!
சிவவாக்கியம் பாடல் 141 – புலால் புலால்
141. புலால் புலால் புலால தென்று பேதமைகள் பேசுறீர்.
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே?
புலாலுமாய் பிதற்றுமாய் பேருளாவும் தானுமாய்,
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் கானும் அத்தனே!.
சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன்
139. உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே?
கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்கனே?
பொருத்தி வைத்த போதமும் பொருந்துமாறு தெங்கனே?
குருத் துருத்தி வைத்த சொல் குறித்துனர்ந்து கொள்ளுமே !