Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்

தூரம், தூரம், தூரம் என்று சொல்லுவார்கள், சோம்பர்கள். பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப் பராபரம். ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும், ஊமைகாள்! நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே !

சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற

சாத்திரங்கள், ஓதுகின்ற சட்டநாத பட்டரே? வேர்த்து இறைப்பு வந்த போது, வேதம் வந்து உதவுமோ? மாத்திரை போதும் உள்ளே அறிந்து நோக்க வல்லிரேல், சாத்திரப்பை நோய்களேது? சக்தி, முத்தி , சித்தியே ?

சிவவாக்கியம் பாடல் 13 – நானதேது நீயதேது

நானதேது, நீயதேது, நடுவில் நின்றது ஏதடா? கோனதேது, குருவதேது, கூறிடும் குலாமரே? ஆனதேது அழிவது ஏது , அப்புறத்தில் அப்பரம். ஈனதேது , ராம, ராம ,ராமம் என்ற நாமமே!

சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச

கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம், இதாம், இதாம் அதல்லவென்று, வைத்துழலும் ஏழைகாள். சதா விடாமல் ஓதுவார், தமக்கு நல்ல மந்திரம். இதாம், இதாம் ராம ராம ராமம் என்னும் நாமமே?

சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை

அந்தி, மாலை, உச்சி, மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும், சந்தி தர்ப்பணங்களும், தபங்களும், செபங்களும், சிந்தை மேவு ஞானமும், தினம் செபிக்கும் மந்திரம், எந்தை ராம, ராம, ராம, ராம, ராமம் என்னும் நாமமே !

சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ

10.மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய்

சிவவாக்கியம் பாடல் 9 – நினைப்பதொன்று கண்டிலேன்

9.நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.

சிவவாக்கியம் பாடல் 8 – என்னிலே இருந்தஒன்றை

8.என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

சிவவாக்கியம் பாடல் 7 – வடிவுகண்டு கொண்டபெண்ணை

7.வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.

சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்

6. உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி

5.ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்

நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்