Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 30 – பண்டு நான் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

30. பண்டு நான் பறித்தெறிந்த, பண் மலர்கள். எத்தனை? பாழிலே செபித்துவிட்ட , மந்திரங்கள் எத்தனை? பிண்டனாய் திரிந்த போது, இறைத்த நீர்கள் எத்தனை? மீளவும் சிவாலயங்கள் , சூழ வந்தது எத்தனை?

பிறந்து , வளர்ந்து, பெரியவர்களாகி, நாம் ஏன் பிறந்தேரம், என இறைவனைத் தேடி சென்றபொழுது, இப்பொழுது உள்ள பழக்கங்களின் படி ,மலர்களும், பழங்களும் , பறித்து எத்தனை பூசைகளை செய்தேன். இந்தப் பாழ் ஆன வெளியிலே, நான் வார்த்தைகளாக, செபித்து விட்ட மந்திரங்கள், ஓடிச்சென்று மறைந்து பாழ் ஆகி விட்டது. பிண்டமாய் திரிந்தபோது எப்படியாவது , இறைவன் மலர் பாதங்களைத் தழவி விட வேண்டும் என தினமும் , குளிக்க இறைத்த நீர்கள் எத்தனை? என் பாவங்களில் இருந்து , மீளவும் சிவ ஆலயங்களாக , சுற்றி வந்தது எத்தனை என சிவவாக்கியர் அவரையே கேட்டுக் கொள்கிறார். அவர் அந்த இறைவனின் பாதங்களைப் பற்றினாரா? …….

Related Posts