Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 67 – சிவாயம் என்ற அக்சரம் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

67. சிவாயம் என்ற அக்சரம், சிவன் இருக்கும் அக்சரம். உபாயம் என்று நம்புதற்கு , உண்மையான அக்சரம். கபாடமற்ற வாயிலை, கடந்து போன வாயுவை. உபாயமிட்டு அழைக்குமே, சிவாய அஞ்செழுத்துமே!

சி-வெப்பம். வா – காற்று, யா- வெளி ம்- வெளியில் நிறைந்துள்ள -ம் எனும் ( நம் காதில் கேட்காத ஒலி) சத்தமில்லாத சத்தம் (high frequency). இந்த high freq மேலும் அதிகமாக ஆக, கண்களுக்குத் தெரியக்கூடிய , வண்ணங்களாக மாறும். இப்படி ஆதியான , வெப்பம், காற்று, வெளி -ம் , அனைத்தும் சேர்ந்த எழுத்துதான் சிவாயம். அக்சரம் என்றால் எழுத்து என்று பொருள். உபாயம் என்றால் தந்திரம். தன்னை அறிய கூடிய திறம் தந்திரம். நம்மை அறிந்து கொள்ள உண்மையான அக்சரம் சிவாயம் தான். கபாடம் என்றால் கதவு, நுழைவு இடம் என்று பொருள். கபாடமற்ற வாயிலை கடந்து போன வாயுவை என்றால், நம் உடலில் , நுழையக் கூடிய இடம், வெளியேறும் இடம் என்று இல்லாத வாயிலைக் கடந்து போன வாயு என்றால் பிராணவாயு என்று அர்த்தம். வாயு என்றாலே, காற்றில் கலந்துள்ள , பிராணன் (oxigen) கரியமில (CO2) , ….. இப்படி வாயுக்களாக பிரித்தால் அது வாயு, அடித்தால் காற்று, நின்றால் வளி . இப்படி நாம் எப்படி இறந்து போகிறோம் என்றால் , பிராணவாயுவாக காற்றில் இருக்கும் oxygen -ஐ பிரித்து உடலுக்கு கொடுக்க கூடிய தகுதியை இழந்த நுரையீரலால் தான். அப்படி இறந்து விடும் பொழுது , தந்திரத்தால் திரும்ப உயிரை அழைக்கும் மந்திரம் இந்த நமசிவாய என்ற அஞ்சு எழுத்துக்கள் என்கிறார்.

Related Posts