Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 63 – உழலும் வாசலுக்கிறங்கி (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

63. உழலும் வாசலுக்கிறங்கி, ஊசலாடும் ஊமைகாள், உழலும் வாசலைத் திறந்து, உண்மை சேர எண்ணுவீர். உழலும் வாசலைத் திறந்து, உண்மை நீர் உணர்ந்த பின், உழலும் வாசல் உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே!

உழலும் வாசல் என்றால், நாம் மூக்கின் வழியாக , பிராண வாயுவை உள்ளே இழுக்கிறோம். அதை சோமன் என்று சொல்வார்கள். அந்த பிராண வாயு உள்ளே சென்று , அனைத்து செல்களிலும் , எரிந்து கரியமில வாயுவாக , சூடாக வெளிவரும் . அதை அருக்கன் என்று சொல்வார்கள். இப்படி உள்ளேயும், வெளியேயும் காற்று உழலும். அதைத்தான் உழலும் வாசலுக்கிறங்கி ஊசலாடும் ஊமைகாள், என்கிறார். மூச்சுப் பயிற்சி என்ற பெயரில், என்ன செய்வது என தெரியாமல் ஊசலாடுகின்றனர் என்கிறார். முதலில் உழலும் வாசலைத் திறந்து உண்மையை அடைய வேண்டும் என எண்ணம் கொள்ளுங்கள். பின் அவனே வழிகாட்டுவான், அப்படி அந்த உழலும் வாசலை அவன் துனையோடு , திறந்து உண்மையை நீங்கள் உணர்ந்த பின், அந்த வாசலுக்குள்ளே இருந்த உண்மையும் , அதன் தன்மையாக , நீங்களும் ஆகி விடுவீர்கள் என்கிறார்.

Related Posts