Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 154 – ஐயன் வந்து (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

154. ஐயன் வந்து மெய் அகம் புகுந்தவாறு தெங்கனே! செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே ! ஐயன் வந்து மெய்யகம், புகுந்து கோயில் கொண்ட பின், வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே!

ஐயன் வந்து என் உடலில் எப்படி புகுந்து ஆக்கிரமித்துள்ளார் என்றால், தேங்காய் குரும்பையில் உள்ளே நீர் புகுந்த மாதிரி என் உள்ளே புகுந்து கோயில் கொண்டு விட்டான். அவன் என் உள்ளே கோயில் கொண்ட பின் , அவனிடம் ஆழ் மனதில் கேள்வி கேட்டு பதில் பெற்றுக் கொள்வதால், மாந்தர் முன் நான் வாய் திறப்பதில்லை என்கிறார்.

Related Posts