Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

119. மூலமான மூசசத்தில் , மூசசறிந்து விட்ட பின். நாலு நாளும் உன்னில் ஒரு நாட்டமாக நாட்டிடில், பாலனாகி நீடலாம், பரப்பிரம்மம் ஆகலாம். ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆனை உண்மையே!.

அவர் முன்னர் வந்த பாடல்களில் கூறிய படி நாலு நாழி தினமும் மூச்சு பயிற்சி, சங்கு இரண்டையும், தவிர்த்து தாரை ஊத வல்லீரேல் எனும் மாதிரி, மூலமான மூசசத்தில் மூச்சறிந்து, அதாவது வயிற்றுக்குள், காற்று செல்வதை கவனித்து வருவதைத்தான் கூறுகிறார். அதற்கு அடுத்த கட்டமாக நாலு நாள் உன்னுள்ளே , அமைதியாக பயணம் செய்தால் அந்த ஆழ் மனதை கண்டு கொண்டு, நாட்டமாக நாட்டிடில், வயது குறைந்து பாலன் போன்று சுறுசுறுப்பாக இருக்கலாம் என்கிறார். அதே போல் பரப் பிரம்மம் ஆகலாம் என்கிறார். பிரம்மம் என்றால் உண்மையான அறிவு. இந்த பரந்த உலகைப் பற்றிய உண்மையான அறிவை பெறலாம் என்கிறார். இதை கல் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, காலங்களை கண்டு உண்டவர், (Lunar காலண்டர் உருவாக்கியவர்) ஆன காலன் ஆகிய சிவனின் மீது ஆனை என்கிறார். அதேபோல் நம்மை இயக்குகிற சக்தி அம்மை மீதும் ஆனை என்கிறார். சிவன் வேறு சிவம் வேறு. சிவம் என்பது அண்ட வெடிப்பின் மையத்தை குறிப்பது. பெரு வெடிப்பால் உருவான அத்தனை பொருள்களுக்கும் சிவம் என்று பெயர். அதைக் கண்டறிந்து நமக்குச் சொன்னவர் சிவன். இதைத்தான் திருக்குறளிள், பொருட்பால் என்று சிவத்தை குறித்து , மூன்றாம் தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்த திருவள்ளுவரால் பெயர் வைக்கப் பட்டது.

Related Posts