Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

163. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும், பணிக்கன் வந்து பார்த்ததும், பாரமில்லை என்றதும், இழையறுந்து போனதும், என்ன மாயம் ஈசனே ?.

ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், என்றால் நெசவு தொழில் செய்பவர்கள் நூற்ற நூலை பாவாக சுற்றி , துணி நெய்வதற்கு நூல் இழை அறுந்து போகாமல் , மிக பக்குவமாக , மிகுந்த கவனத்துடன் பாவிழைப்பார்கள். அப்படி வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி பார்த்துப் பார்த்து மனைவி மக்கள் என உழைத்து உள்ளங்கால் வெளுத்து , செய்தாலும் , பாவியான பூனை பாவிலே குதித்தால் என்ன செய்வது இழை அறுந்து போகாமல் இருக்குமா?. மருத்துவர் வந்து பார்த்து பாதகமில்லை என்று சொன்னாலும், இழை அறுந்து போனதே… இது என்ன மாயம் ஈசனே என்கிறார்.

Related Posts