Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 64 – மூல நாடி (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

64. மூல நாடி தன்னிலே, முளைத்தெழுந்த சோதியை, நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின், பாலராகி வாழலாம், பறந்து போக யாக்கையும், ஆலம் உண்ட கண்டர் ஆனை, அம்மை ஆனை உண்மையே!

நம் உடலே சாதாரணமாக, நோய்கள் இல்லாத சமயத்தில் ஒரு சூடு இருந்து கொண்டே இருக்கும். அதை விட கம்மி ஆனாலும் நோய் அதிகமானாலும் நோய். 37 டிகிரி செல்சியஸ் சூட்டில் நாம் எப்பொழுதும் சோதியாக இருப்போம். ஆனாலும் மூல நாடியில் முளைத்தெழும் சோதியை கவனித்து கொண்டிருந்தால். உடல் மேலும் சூடாகும். உடல் சூடானாலே தேவையில்லாத , உடலெங்கும் ஆலமரம் போல் பரவி இருக்கும் , கழிவுகள் வெளியேறும், அதைத்தான் ஆலம் உண்ட கண்டர் பாதம் என்பது. ஆலம் என்றால் விசம் என்ற கழிவு. உள் மூசசு வெளி மூச்சு இரண்டும் தான் , பால் கடலை கடையும் கயிறுகள். காற்றை கால் எனவும் கூறுவோம். சுழு முனையில் எழுந்த சோதியை , நாலு நாழி , ஐம்புலன்களை கவனிக்காமல், சோதியை நாடி நின்றால், சிறு வயது பாலகர்களாக, யாக்கை (உடல்) பறந்து கொண்டு இருப்பது போல் வாழலாம் என்கிறார். இது அம்மை பாதம் உண்மை என்கிறார்.. ஒரு நாழி என்றால் 24 நிமிடம். நாலு நாழி என்றால் , 96 நிமிடம். அம்மை பாதம் என்றால், உடல் சூட்டால் வெளியேறும் கழிவுகள் முடிந்தவுடம், அமிழ்தம் உருவாகி உடல் மிதப்பது போல் உணர்வோம். அம்மை உருவாக்கிய உடலாக (குழந்தை) மாறிவிடும் என்பதைத்தான் அப்படி கூறுகிறார்.

Related Posts