Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

166. கோசமாய் எழுந்ததும், கூடுறுவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே! ஈசனார் இருந்திடம், அநேக அநேக மந்திரம். ஆசனம் நிறைந்து நின்ற 51 எழுத்துமே.

கோசமாய் எழுந்ததும், என்றால் விதையாக சுணங்கி இருந்த விதை, விதைப் பையிலிருந்து கோசமாக உயிராக எழுந்ததும், கருமுட்டையை ஊடுறுவி நின்றதும், சத்துக்கள் எடுத்து தேகமாய் பிறந்ததும், இந்த நமசிவாய ஐந்து எழுத்துக்கள் தான். ந- மண், ம – நீர், சி – வெப்பம், வா – காற்று, யா- ஆகாயம். கலந்த கலவைதான் இந்த உடல்கள்(சிவம்). ஈசனார் இருந்திடம் அதாவது உயிர, அநேக அநேக மந்திரங்கள் உருவாவது, இந்த ஓம் + நமசிவாய எனும் 5 + 1 = 51 எழுத்துமே.

Related Posts