Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் ஏது? (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

44. சித்தம் ஏது? சிந்தை ஏது? சீவன் ஏது? சித்தரே! சக்தி ஏது? சம்பு ஏது ? சாதி பேதமற்றது. முக்தி ஏது ? மூலம் ஏது? மூல மந்திரங்கள் ஏது? வித்தில்லாத வித்திலே ! இன்னதென்று இயம்புமே!.

சித்தர் என கூறிக்கொண்டு இருக்கும் , சித்தரைப் பார்த்து கேட்கிறார். சித்தம் என்றால் என்ன? அது எது? சிந்தை என்றால் என்ன? சீவன் என்றால் என்ன? சக்தி என்பது எது? சம்பு என்றால் சிறு இலைகளைக் கொண்ட ஒரு விளையும் தாவரம். நம் உடல் விளைவைத் தான் சம்பு என்கிறார் . இது எதுவோ அது , சாதி பேதமற்றது என்கிறார். முக்கி என்றால் என்ன? மூலம் என்றால் என்ன? மூலமந்திரங்களின் அர்த்தம் என்ன? அது வெல்லாம் எங்கே இருக்கிறது. வித்து என்றால் விதை. இவையெல்லாம் வித்தில்லாத வித்திலே இருக்கிறதா? என்ன வென்று சொல்லுங்கள் சித்தரே என கேட்கிறார்.

Related Posts