Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

118. விண் கடந்து நின்ற சோதி, மேலை வாசலைத் திறந்து. கண் களிக்க உள்ளுலே, கலந்து புக்கிருந்த பின். மண் பிறந்த மாயமும், மயக்கமும் மறந்து போய். எண் கலந்த ஈசனோடு இசைந்து இருப்பது உண்மையே!

விண் கடந்து நின்ற சோதி என்றால் சூரியன் தான். அந்த சூரியனால் தான் நாம் உடல் பெற்றோம். அது தான் சிவம். அதே சூரியனால் தான் நாம் இயங்க கூடிய சகதியையும் (சத்து) பெற்றோம். அது தான் நம்முடைய உடலை சிவ சக்தி வடிவம் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இறைவனை நோக்கி மலரடி வைத்த பின் அந்த சோதி நம் உச்சியை , அதுதான் திறந்து உள்ளே வருகிறது என்கிறார். அதுவும் நம் உள்ளே கண்களிக்க காட்சிகளை காட்டி என்னுள்ளே அவன் அமர்ந்து இருந்ததால், நான் இந்த மண்ணில் பிறப்பெடுத்த மாயமும் , உலகின் மீதிருந்த மயக்கமும் , மறந்து போய், எண்களில் கலந்து நிற்கின்ற அந்த ஈ சன் உடன் நான் இசைந்து இருப்பது உண்மையே என்கிறார்.

Related Posts