Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 77 – மாடு கன்று (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

77. மாடு கன்று செல்வமும், மனைவி மைந்தர் மகிழவே ! மாட மாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே ! ஓடி வந்து கால தூதர், சடுதியாக மோதவே! உடல் கிடந்து, உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர்?

நாம் நமது தேவை, நமது மனைவி மைந்தர் என அவர்களின் தேவை, நம்மை சூழ்ந்துள்ள மக்களின் தேவை என்பதற்காக, மாட மாளிகை என்று இல்லாமல் , தேவைகளுக்கு மேல் செல்வம் சேர்த்து வாழ்ந்தாலும், நம் காலம் முடிந்த உடன், வயதாகி தான் காலம் முடியும் என்றில்லை , எப்பொழுது வேண்டுமானாலும், கால தூதர்கள் வந்து நம்முடன் மோதினால், நம் உடல் கீழே விழுந்து, உயிர் பிரிந்து கழன்று, போய் விடும் உண்மையை அறியாமல், தேவையற்ற செல்வங்களின் மேல் பற்று வைத்து, நாமும் அழிந்து , அடுத்தவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.

Related Posts