Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 183 – அன்னமிட்ட பேரெலாம் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

183. அன்னமிட்ட பேரெலாம் அனேக கோடி வாழவே, சொர்ணம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம். பின்னம் இட்ட பேரெலாம் வீழ்வர் வீண் நரகிலே, கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்று தின்னமே!

அன்னதானம் செய்வதென்பது , கலியுகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கொடுமைகளினாள் , வறுமையில் வாடுபவர்களுக்காக உருவாக்கப் பட்டது. அதை செய்பவர்கள் பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்வார்கள் என்கிறார். அந்த செலவுகளுக்காக பணம் கொடுப்பவர்கள் துரைத் தனங்கள் பண்ணுவர் , ஏனென்றால் அவர்கள் கையில் பணம் இருக்கும் பெருமையால். ஆனால் அந்த அன்னதானத்தை முடக்க நினைப்பவர்கள் வீழ்வர் வீண் நரகத்தில் என்கிறார். ஆனால் வாசியால் கன்னமிட்டு சிற்றம்பலம் அடைந்து உச்சியைக் கடந்து பிறப்பிலா பேற்றைப் பெருவார்கள் என்பது தின்னம் என்கிறார்.

Related Posts