Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

120. மின் எழுந்து, மின் பரந்து, மின் ஒடுங்கும் வாறு போல் , என்னுள் நின்ற என்னுள் ஈசன், என்னுளே அடங்குமே! கண்ணுள் நின்ற கண்ணின் நேர்மை, கண் அறிவிலாமையால், என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்ததில்லையே!

வானில் மழை காலங்களில் தோன்றிய மின்னல் எழுந்து, வான் எங்கும் பரந்து விரிந்து சில விநாடிகளில் ஒடுங்குவது போல் , என்னுள் நின்ற ஈசன் என்னுள் பரந்து என்னுளே அடங்குவான். என் கண்களுக்குள் இருந்த அவனை, என் கண்ணின் அறியாமையால், என்னுள் நின்ற என்னை மட்டும் அறிந்த நான், என்னுள் நின்ற அவனை நான் அறியாமல் இருந்திருக்கிறேன். என்கிறார்.

Related Posts