Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 176 – வட்டமான கூட்டிலே (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

176. வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ , சட்டமீ படத்திலே சங்கு சக்கரங்களாய் விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின், முட்டையில் எழுந்த சீவன் விட்டு வாரதெங்கனே.

அப்பாவின் விதைப்பையில் , வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ . இதைக் குறிக்கத்தான் பெருமாளின் ஒரு கையிலே சங்காகவும், ஒரு கையிலே சக்கரமாகவும் சட்டம் போட்ட படத்தில் மாட்டி வைத்துள்ளோம். நம் சீவன் இந்த உலகினை அறிந்து கொள்ள நம்முடைய ஐந்து புலன்களை பயன்படுத்துகிறது. அந்த மதயானை போன்ற ஐந்து புலன்களையும் கதவினால் அடைத்து உள்முகமாகவே அனைத்தையும் அறியும் ஆற்றலும், நினைத்ததை செய்யக் கூடிய பக்குவமும் வந்து விடும். இப்படி முத்தி பெற்று விட்டால் அம்மாவின் கரு முட்டையில் சத்துக்கள் பெற்று உடலாக எழுந்த சீவன் அந்த சிற்றம்பலம் (சிரசு) எனும் கூட்டை விட்டு வெளியே வருவது எப்படி சாத்தியம் என கேட்கிறார்.

Related Posts