Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 50 – சொற்குருக்களானதும் சோதிமேனியானதும் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

50. சொற்குருக்களானதும் சோதிமேனியானதும் மெய்க்குருக்கானதும் வேணபூசைசெய்வதும் சற்குருக்களானதும் சாத்திரங்கள் சொல்வதும் செய்க்குருக்களானதும், திரண்டுருண்ட தூமையே.

குரு குலம் என்பது இந்த 1500 வருடங்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம், ஆசான் பள்ளிகள் தான் . பள்ளி என்பதை தூங்கும் இடமாக , சினிமாக்களிலும், நாடகங்களிலும், சித்தரித்து , நம்ப வைக்க , தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். ஆக குருகுலங்கள் என ஆரம்பித்து, அதில் வேதங்கள் என, எதையோ பிதற்றி சொல்லித்தரும் குருக்கள் உருவானதும், இந்த உலகில் அனைவருக்கும் மேனி உருவாக மூலம் சோதிதான், அந்த சோதி மேனியாக காரணம் திரண்டு உருண்ட தூமை தான், தீ வளர்த்து யாகம் செய்யும், மெய்க் குருக்களும், சாத்திரங்கள் சொல்லும், சற்குருக்களும் உருவெடுத்தது இந்த திரண்டு உருண்ட தூமையில் இருந்து தான், என்கிறார்.

Related Posts