Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 76 – ஒக்கவந்து மாதுடன் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

76. ஒக்கவந்து மாதுடன், செறிந்திடத்தில் அழகிய, ஒருவராகி, இருவராகி இளமை பெற்ற ஊரிலே, அஃகனிந்து, கொன்றை சூடும் அம்பலத்தில் ‘ஆடுவார், அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே!

அஃகனிந்து கொன்றை சூடும் அம்பலம், என்றால் சுழிமுனை, இதநாடி, பின்கல நாடி என ஃ போன்று மூன்று நாடிகள் சிரசில் உடலை சீராக வைத்துக் கொண்டு , அண்டத்தின் ஆற்றலுடன் இணைந்து உள்ளது. சுழுமுனை ஐம்புலன்களையும் அறிந்து கொண்டு அண்டத்துடன் இணைந்து நானாக இருக்கிறது. மற்ற இத நாடியும், பின்கல நாடியும் , உடலை சீராக இருக்க வேலை செய்கிறது. அதனுடன் மனம் மூளை வழியாக ,இணைந்துள்ளது. மனம் பயந்தாலோ குழபபம் அடைந்தாலோ,, அது தாறுமாறாக வேலை செய்து , உடல் பாதிக்கும். மனம் அமைதியாக இருந்தால் , அது இயல்பாக வேலை செய்து , உடல் நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட ஃ போன்ற நாடிகள் உள்ள இடத்தில் , கொன்றை மலர்கள் சூடிய சிவம் இருக்கும் இடமான அம்பலமாக, அவனுடன் சேர்ந்து அம்பலத்தில் ஆட வேண்டும் என்றால் , நமசிவாயம் எனும் அர்த்தம் புரிந்து , ஓதிடில் அனேக பாவம் அகலும், என்கிறார். ஏனெனில் அமைதியாக 4 நாழிகை 96 நிமிடம்) தினமும் , உட்கார்ந்தாலே , மூன்று நாடிகளும் நன்கு வேலை செய்யும். உடல் பாதிப்புகள் குறையும். மனம் தெளிவடையும். இது சில நாட்களுக்குத்தான். பின் சாதரணமாக மனம் குழம்பாமல் , விரைந்து முடிவெடுக்கும் திறன் வளர்ந்துவிடும். திருமணமாகி ஒத்திசைவுடன் , இணைந்து, குழந்தை உருவாக்குகிறோம் என்று அறியாமலேயே, ஆனந்தமான இணைதலில் ஒற்றை செல் இரண்டாகி , பெருகி அழகிய இளமையான உடலை உருவாக்கிய நாம் , சிவத்துடன் இணைந்து , நம் சிரகில் உள்ள அம்பலத்தில் ஆடுவோம்.

Related Posts