Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

139. உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்கனே? பொருத்தி வைத்த போதமும் பொருந்துமாறு தெங்கனே? குருத் துருத்தி வைத்த சொல் குறித்துனர்ந்து கொள்ளுமே !

தந்தையின் விரைப் பையில், மூன்று வளையமாக சுனங்கு போல் உள்ள சோதி உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? என கேட்கிறார். இந்த ஆணும் இந்தப் பெண்ணும் இணைந்தால் தான் , நம் உயிர் பெற்ற உரு கருத்தரிப்பின் காரணம் எங்கனே? என்கிறார். இவர்கள் தான் தாய் தந்தை என்றுபொருத்தி வைத்த போதமும் , பொருந்துமாறு தெங்கனே. துருத்தி என்றால் காற்றை ஊதி கொள்ளர்கள் பட்டறையில் இரும்பை உருக்க பயன்படும் கருவி . அப்படி உருவாகும் சோதியை (சொல்) சீவனாக குறித்துணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.

Related Posts