Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

அந்தி, மாலை, உச்சி, மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும், சந்தி தர்ப்பணங்களும், தபங்களும், செபங்களும், சிந்தை மேவு ஞானமும், தினம் செபிக்கும் மந்திரம், எந்தை ராம, ராம, ராம, ராம, ராமம் என்னும் நாமமே !

அந்தி (காலை ) , மாலை , உச்சி ( மதியம்) மூன்று வேலைகளிலும், குளித்து விட்டு, சந்தி வேளைகளில் செய்யும், தர்பணங்களும், தவங்களும், செபங்களும், ஞானம் வேண்டி சிந்தைக்குள் துழாவுபவர்கள் தினம் செபிக்கும் மந்திரம் எது வென்றால் , ராம, ராம, ராம, ராம மென்னும் நாமமே!

Related Posts