Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 86 – மந்திரங்கள் உண்டு நீர் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

86. மந்திரங்கள் உண்டு நீர், மயங்குகின்ற மானிடர். மந்திரங்கள் ஆவது, மரத்தில் ஊரல் அன்று காண். மந்திரங்கள் ஆவது, மதத்தெழுந்து வாயுவை, மந்திரத்தை உண்டவர்க்கு, மரணம் ஏதும் இல்லையே!.

நாம் சுவாசிக்கும் பொழுது, உள்ளே போவது, பிராணவாயு நிறைந்த குளிர்சியான காற்று, அதை வாயு என சொல்வதில்லை. oxygen, hydrogen, Carbon dioxide என தனித்தனியாக பிரிந்தால் அது வாயு. காற்று என்றால் oxygen நிறைந்த, அனைத்து வாயுக்களும் உள்ளது. ஆகவே நாம் உள்ளே இழப்பது குளிர்ச்சியான காற்று. வெளியே வருவது சூடான கரியமில வாயு நிறைந்தது. ஆகவே வெளியே வருவதை வாயு என்றும். உள்ளே செல்வதை காற்று எனவும் கூறுகிறார். வெளியே வரும் வாயுவை கொண்டு தான், நாம் பேச முடியும். தமிழில் உள்ள ஒவ்வொரு எழுத்தும், சொல்லும் மந்திரங்கள் தான். இப்படி தமிழில் மந்திரங்களாகிய சொற்களில் பேசி மகிழ்ந்து மயங்குகிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு ஒலிகளும் , மரத்தில் ஊரல் அன்று காண், என்றால் தொண்டையில் ஊறல் போல் வடிவதல்ல. வெளியே வரும் வாயுவால் அதிர்வாகி ஒலியாக மாறுவதைத் தான் மதத்தெழுந்த வாயு என்கிறார். மந்திரத்தை உண்டவர்க்கு என்றால் , வயிற்றில் உள்ளேயும், வெளியே செல்லும் காற்றையும், வாயுவையும் கவனித்து உண்டவர்களுக்கு மரணம் கிடையாது என்கிறார். இதைத்தான் சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லீரேல் என்று முன் வந்த பாடலில் குறிப்பிட்டு இருப்பார்.

Related Posts