Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 147 – மூலமாம் குளத்திலே (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

147. மூலமாம் குளத்திலே, முளைத்தெழுந்த கோரையை, காலமே எழுந்திருந்து, நாலு கட்டு அறுப்பீரேல். பாலனாகி வாழலாம், பரப்பிரம்மம் ஆகலாம், ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மைபாதம் உண்மையே!

ஆலம் உண்ட என்றால் , ஆலம் விதையில் அதன் வளர்ச்சியும், காலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டவரான சிவன் பாதம், அதே போல் நிலாவின் பாதம் பூமியில் 369 km வட்டமாக சூரிய கிரகணத்தன்று விமும் அது அம்மை பாதம். இவை இரண்டும் உணமை அது போல நம் உச்சியில் குளம் போன்ற மூளையின் பல செல்கள் உயிர் பெறாமல் உள்ளது. அதை உயிர்ப்பிக்க தினமும் காலையில் எழுந்து , நான்கு நாழிகை நம் மூச்சை கவனித்தால் , வாசி நம் மூளைக்குள் சென்று , லட்சக்கணக்கான செல்களை உயிர்ப்பித்து , நம் உடல் ஆரோக்கியமாக, பாலர்கள் போல ஓடி ஆடி வாழலாம் என்பது அவர் கண்ட உண்மை என்கிறார். வாழ்க்கை மிகவும் எளிது. எந்த ஜீம்பூம்பாவும் கிடையாது. எளிமையாக வாழ்ந்தால் பிறவி பெருங்கடலை எளிதாக நீந்தலாம்.

Related Posts