Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 59 – அண்டம் நீ (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

59. அண்டம் நீ , அகண்டம் நீ . ஆதிமூலம் ஆன நீ, கண்டம் நீ,கருத்து நீ , காவியங்கள் ஆன நீ, பூண்டரீக மற்றுளே, புணருகின்ற புன்னியர், கொண்ட கோலம், ஆன நேர்மை, கூர்மை என்ன கூர்மையே!.

சுற்றம் சூழ ஆசிர்வதித்து, திருமணம் நடத்தி வைத்து, ஒரு உயிர் உள்ள உடலை படைக்கப் போகிறோம், என தெரியாமலேயே, ஆண் பெண் இனையும், நேர்மை , கூர்மை என்ன கூர்மையே ! என ஆச்சரியப்படுகிறார். அண்டம் நீ , அகண்டம் நீ, ஆதி மூலமும் நீயே என கொண்டாடுகிறார். கண்டம் நீ , உலகில் உள்ள அனைத்து கருத்துகளுமாக இருக்கிறாய், உலகில் நடக்கும் அனைத்து காரியங்களிலும், காவியங்களாகவும், ரசிக்க கூடியதாகவும் இருக்கும் அனைத்துமாக இருக்கிறாய் என புழங்காகிதமாகிறார்.

Related Posts