Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

74.மண் கலம் கவர்ந்த போது, வைத்து வைத்து அடுக்குவர். வெண்கலம் கவர்ந்த போது, நாறும் என்று பேணுவார். தன் கலம் கவர்ந்த போது நாறும் என்று போடுவார். என் கலந்து நின்ற மாயம் , என்ன மாயம்? ஈசனே !.

நம்மை கவர்ந்த மண் கலம் ஏதாவது இருந்தால் அது உடைந்து விடாமல் இருக்க , அடுக்கி வைத்து உடையாமல் பார்த்துக் கொள்வார்கள். அதே போல் வெண்கலத்தில் ஏதாவது பாத்திரங்கள் இருந்தால், அது பாசம் பிடித்து நாறும் என்று , 6 மாதத்திற்கு ஒரு முறை விளக்கி , துணிகள் போட்டு கட்டி பேணுவார்கள். ஆனால் நம்முடைய உடல் உயிர் பிரிந்த போது, அதை நாறும் என்று குழிக்குள் போடுவர். இப்படி நாறும் இந்த உடலில், என்னுடன் எப்படி நீ கலந்து இருக்கிறாய், இது என்ன மாயம் , என ஈசனைப் பார்த்து ஆச்சரியப் படுகிறார்.

Related Posts