Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

102. ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க் கெல்லாம், வெளியதான சோதி மேனி, விசுவநாதனானவன். தெளியு கங்கை (மங்கை) உடனிருந்து செப்புகின்ற தாரகம், வெளிய தோரி ராம ராம ராமமிர்த நாமமே!.

(அந்த காலத்தில் )ஒளி வீசக் கூடிய, காசிப் பட்டிணம் வந்து தங்குவோர்களின் மேனி , வெளியில் உள்ள சோதியை உருக்கி செய்தவன் விசுவநாதன். (இறைவன்). அந்த காசியில் கங்கை கரையில் இருந்து செப்புகின்ற தாரக மந்திரம் எப்படி இருக்கும் என்றால், ரத்த சோகையான வெளிரிய , ராம ராம எனும் ராமமிர்த நாமம் என அந்த நாமத்தை சொல்கிறவர்களை இகழ்கிறார். ஆக சிவ வாக்கியர் பாடல் என்றால் அதில் ராம ராம என பாடியிருக்கிறார். ஆகவே இதை கேட்கமாட்டோம் என்பவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை என்று அர்த்தம்.

Related Posts