Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 151 – மீன் இறைச்சி (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

151. மீன் இறைச்சி தின்றதில்லை, அன்றும் இன்றும் வேதியர், மீன் இருக்கும் நீரலல்லவோ? முழுகுவதும், குடிப்பதும். மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், மான் உரித்த தோலல்லோ? மார்பு நூல் அணிவதும்.

இன்று சிவ வாக்கியர் இருந்திருந்தால், இந்த ஊடகங்களை வைத்து, மக்களை ஏமாற்றும் இந்த வேதியர்களை ஒரு பிடி பிடித்திருப்பார். அன்று இறைச்சி சாப்பிடுவதில்லை என நல்லவர்கள் போல் வேடமிட்டுத் திரிந்த வேதியர்களைப் பார்த்து , மீன் இருக்கும் , ஆறு, குளங்களிலிருந்து வரும் நீரினைத்தானே குடிக்கிறீர்கள், குளிக்கிறீர்கள். மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர். ஆனால் மார்பில் அணியும் நூலை மான் தோலினால் தானே அணிகிறீர்கள் என கேட்கிறார்.

Related Posts