Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

148. செம்பினிற் கழிம்பு வந்த சீதரங்கள் போலவே, அம்பினில் எழுதொனாத வனியரங்க சோதியை, வெம்பி வெம்பி வெம்பியே, மெலிந்து மேல் கலங்கிட, செம்பினில் கழிம்பு விட்ட சேதியது காணுமே!

செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் , பச்சையாக ஒரு படிவம் படியும். அதைத் துலக்கினால் , பாத்திரம் பல பல வென்று தகிக்கும். அது போல நாம் நம் உள் இருக்கும் மனி அரங்க சோதியை , வெம்பி வெம்பி வேண்டி அதாவது மூச்சுக காற்றை. கவனித்து அந்த ஆழ் மனதில் குடி கொண்டால் , வாழ்வியலும் நன்றாக இருக்கும். நம்மை சுற்றி நடக்கும் மாயைகள் புரியும், செம்பினில் கழிம்பு விட்டு சோதியது காணுமே! என்கிறார்.

Related Posts