Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.

விதைகள் காய்ந்த நிலையில் வெப்பத்தை உள் அடக்கி , அந்த விதையில் முளைக்க உள்ள உயிரின், வளர்ச்சியின் அத்தனை தகவல்களையும், சேகரித்து வைத்திருக்கும். அந்தத் தகவல்கள் வெப்ப ஆற்றலாக ( சி ) மறைந்து இருக்கும். விதை எப்பொழுது நீரில் ஊறி , உயிராக உயிர்த்தெழுந்து , முளைக்க ஆரம்பிக்கிறதோ, அந்த வெப்ப ஆற்றல் தான் உடலாகிறது. நகராத உயிரிணங்கள் , வேரிவிருந்து சத்துக்களை எடுத்து வளரும். நகரும் உயிரிணங்கள், மண்ணீரல் மூலம் சத்துக்கள் எடுத்து வளரும். நீரையள்ளி , நீரில் விட்டு நீர் நினைந்த காரியம், இதன் அடிப்படை தெரியுமா என கேட்கிறார். யாரை நினைத்து நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர், என அறியாமையில் இருப்போரை பார்த்து கேட்கிறார். நமக்கு சிவ பதத்தை அடையும் வித்தையை சொல்லிக் கொடுக்கிறார். வேரை உன்னி , வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த நம்மை சி எனும் வெப்பத்தை , சீரையுன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம் என்கிறார். ஒளி, காற்று , வெப்டம் மூன்றும் சேர்ந்ததுதான் விதை. நாம் இயங்குவதற்கு அடிப்படை இம்மூன்றும் தான். இதை நன்கு புரிந்து , வெப்ப ஆற்றலை விரையமாக்காமல், இயக்கத்தில் இருந்தால் , உடல் ஆரோக்கியமாக, சிவபதத்தை அடையும் முயற்சியில் அமைதியாக மனம் இயங்கும்.

Related Posts