Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 191 – சுக்கிலத் திசையுளே (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

191. சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர வெட்டுளே மூலாதார அறையிலே அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய் உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே!!

நம் உடலில் மூலாதாரம் என்பதை இருவகையாக சொல்லலாம். மேலிருந்து கீழ். கீழிருந்து மேல். மேலிருந்து கீழ் என்றால் மூலாதாரம் திருவரங்கம் எனவும். கீழிலிருந்து மேல் என்றால் மூலாதாரம் சிற்றம்பலம் எனவும் வகுத்துள்ளார்கள். இரண்டுக்கும் ஓம் தான். இந்தப் பாட்டில் இரண்டு மூலாதாரங்களையும் இணைத்துத்தான் ஒரே பொருளில் பாடுகிறார். சுரோணிதம் சுக்கிலம் என்றால் விந்து நாத தத்துவத்தை சொல்கிறார். சிவம் சக்தி தான நாத விந்து. முச்சதுரம் என்றால் முக்கோணம். மூன்று நாடிகளைக் கொண்டது தான் நம் சிரசு. அதுதான் மொத்த உடலையும் இயக்குகிறது. சூக்கும நாடி . இத நாடி, பின்கல நாடி, எனும் மூன்று நாடிகள் தான் மொத்த உடலின் இயக்கத்தை நடைமுறைப் படுத்துகிறது. இந்த மூலாதார அறையிலே தான் ஆக்கு நெய் (அமிர்தம்) உருவாகும் . அதாவது உலக இயக்கத்தின் அறிவு , புத்தி , சித்தம் மலரும். அந்த இடம் தான் அச்சமற்ற சவ்வு என்பது. இறைவன் இணைந்து உள்ள இடம் அச்சமற்ற சவ்வு. அரி, அரன், அயனுமாய் என்றால். விஷ்ணு, சிவன், பிரம்மா (முருகன்) என்பார்கள். வெளியில் உள்ள அதிர்வுகளை நமக்கு விதிகளாக வடித்தவர் வீட்டினன். அதனால் வெளியை அரியாகவும், காற்றை முறைபடுத்தி குண்டலினியை கொடுத்தவர் சிவன் (ருத்திரன்) சிவம் வேறு சிவன் வேறு. அக்னிதேவன் முருகனை பிரம்மா என்பார்கள். முதலாம் நீர் ஊழியில் மக்களை மடியாமல் மீண்டும் படைத்தவர் முருகன். அதனால் அவரை பிரம்மா என்பர். இந்த சி (வெப்பம்) வா (காற்று) யா (வெளி) தான் உச்சரிக்கும் மந்திரம் சிவாயம் உண்மையே என்கிறார்.

Related Posts