Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 51 – கை வடங்கள் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

51. கை வடங்கள் கண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர், எவ்விடங்கள் கண்டு நீர், எண்ணி எண்ணி பார்க்கிறீர். பொய் உணர்ந்த சிந்தையை , பொறுந்தி நோக்க வல்லீரேல்! மெய் கடந்து உம்முள்ளே விளைந்து கூறலாகுமே!

கர்மயோகம், செய்கிறேன் என்று , செய்து செய்து, கைகள் மரத்துப் போனதைப் பார்த்து , கண்சிமிட்டி, இன்னும், இறைவனை காணாமல் நிற்கிறீர் , இறைவன் எங்கே இருக்கிறான், என்று , இங்கே, அங்கே என தேடி அலைந்து, எண்ணி எண்ணி பார்க்கிறீர், ஆனால் நம்முள்ளே , மாயையால், பொய்களை உணர்ந்த சிந்தனைகளை , அதனுடன் பொருந்தி அதன், மூலம் என்ன, அது எப்படி வேலை செய்கிறது, எதையெல்லாம் உணர்கிறது என பார்த்தீர்களே ஆனால், இந்த உடலைக் கடந்து , உம் உள்ளே , விளைந்து அது உம்மிடம், நான் இங்தேதான் இருக்கிறேன் என பேசும், என்கிறார்.

Related Posts