Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 114 – நீடு பாரிலே (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

114. நீடு பாரிலே பிறந்து , நேயமான காயந்தான். வீடு வேறு இதென்ற போதும், வேண்டி இன்பம் வேண்டுமோ? பாடி நாலு வேதமும், பாரிலே படர்ந்ததோ? நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே!

இந்த நெடிய உலகத்திலே பிறந்து உருவான உருவம் தான் என்றாலும், அடுத்த வீடு (நாடு) என்ற போது அதைக் கைபற்றி அதில் இருப்பவர்களை அடிமை செய்து கிடைக்கும் இன்பம் வேண்டுமோ? என்கிறார். அப்படி நாலு வேதங்களை, அதன் அர்த்தம், அதன் வேதியல் பன்புகளை அறியாமல், அதை வெறும் அர்த்தம் இல்லாத பாடல்களாக உலகெங்கும் பரப்பியவர்கள் நாடும் நாமம் தான், ராம ராம ராம எனும் நாமம். நான்கு வேதங்கள் கொடுத்தவர் சிவன் 20,000 வருடங்களுக்கு முன்பே. 1. உருக்கு வேதம் . உலோகங்கள் உருக்கிப் பிரித்தல். 2. அதிர்வண வேதம். 4 வகையான இசைக் கருவிகள் செய்வதும், அதன் ராகம், தாளம் போன்ற இசை வடிவங்களின் படைப்புகள். உருவாக்குவது. 3. சாம வேதம். சாம பேத தான தண்டம் எனும் அரசியல் சார்ந்த வேதியல். 4. ய சூரணம் வேதம். தெற்கு பகுதியில் இருந்த மருத்துவ குறிப்புகள், சூரணங்கள் தயாரிப்பு வேதியல். இப்பொழுது வேதம் என்று black magic பாடல்களை வைத்து மனப்பாடம் செய்து கொண்டு இருப்பதைத்தான், இகழ்கிறார்.

Related Posts