Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

தூரம், தூரம், தூரம் என்று சொல்லுவார்கள், சோம்பர்கள். பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப் பராபரம். ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும், ஊமைகாள்! நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே !

நம்மை படைத்து காத்து வரும் இறைவனை , எங்கே என கேட்டால், அவர் இருப்பது தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் , சோம்பேறிகள். பாரும் என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்தப் பாரும் , விண் எங்கும் பரந்து இருக்கும் , அப் பரந்த பராபரம். அதை தேடி ஊர் ஊராகவும், நாடு நாடாகவும், காடு காடாகவும் தேடி , உழன்று போய் மறுபடியும் தேடி அலையும் ஊமைகாள்! ‘ அதை எங்கும் வெளியே தேடாமல், உங்கள் உள்ளே அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts