Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

164. சதுரம் நாலு மறையும் இட்டு, தான தங்கி மூன்றுமே!.. எதிரான வாயுவாறு என்னும் வட்ட மேவியே. உதிரந்தான் மறைகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்| கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதமே!

நான்கு வகையான வேதியல்களாலும், எட்டு வகையான சக்திகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டவைதான், இந்த உடலின், மூன்று அங்கிகளான, தோல், எலும்பு, சதை. காற்று வெப்பத்தால் வாயுவாகி , புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக எழுந்து மேலே செல்லும். அந்த வாயுதான் நம் செல்கள் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக வளர்ந்து நடப்பதற்கும், நம்மை இயங்கவும் வைத்துக் கொண்டு உள்ளது. நாம் உன்னும் உணவு , சத்துக்களாக பிரித்து, உருவாகும் நம் இரத்தம் எட்டு வகையான சக்திகள்தான். அவை சிரசு வரைக்கும் சென்று நம் மனதை இயக்கிக் கொண்டு உள்ளது. நம் உடல் சூரிய கதிர்களால் ஆக்கப்பட்டவைதான். கதிரதான காயத்தில், அதிர்வான நாதத்தில் கலந்து எழுந்தது தான் இந்த உடல். கடைசியில் நாதமாக அதிர்வாக வெளியில், information ஆக இருக்கும். அந்த நாதம் மீண்டும் கதிர் உடன் இணைந்து உடலெடுக்கும்.

Related Posts