Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 79 – பாடுகின்ற தும்பருக்கன் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

79. பாடுகின்ற தும்பருக்கன் அங்கநாங்கென்னெழுக்கியே, பழுதிலாத கண்ம கூட்டம், இட்ட எங்கள் பரமனே! வீடு செம்பொன் அம்பலத்தில், ஆடு கொண்ட அப்பனே! நீல கண்ட, கால கண்ட, நித்ய கல்யானனே.!.

சிவத்தை கண்டு அறிவித்த சிவனைத் தான் எப்படியெல்லாம், ஆராதனை செய்கிறார். பாடுகின்றதும், நம்முடன் இனைந்திருக்கும், அருக்கனும், (சூரியகலை) அங்கன், அனங்கன், (மன்மதன்) , அழகிய பழுதில்லாத கன்ம கூட்டம் வணங்கும் எங்கள் பரமனை, பேரின்பமான செம்பொன் அம்பலத்தில் ஆடும், எங்கள் அப்பனே ! சிற்றின்பமான ஆண் பெண் இனைதலின் , கல்யாணம். ஆனால் நித்யகல்யாணன் என்றால் பேரின்பம். கால கண்டன் என்றால், காலத்தை நிலவின் ஓட்டத்தால் அறிவித்தவன், ‘ இரண்டாம் பருவமான , 12 வயதிலிருந்து 24 வயது வரையான பருவத்தில் , ‘பருவம் எய்தி ஆண் பெண் மலர்ச்சியின வண்ணம் நீலம் . அந்த நீலம் கண்டவன், நீலகண்டன். வீடு பேறு அடைய செம்பொன்னாகிய சிரசில் , அம்பலத்தில் ஆடுபவன். இது மனித குலத்துக்குச் சொந்தமானது. எந்த சமயத்திற்கும், மதத்திற்கும் உரிமை கொண்டாட முடியாத , மானிடச் செல்வம்.

Related Posts