Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 8 – என்னிலே இருந்தஒன்றை (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

8.என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

number எண்களில் இறைவன் இருக்கிறான், அதேபோல் என் உள்ளும் இறைவன் இருக்கிறான். என் உள்ளே இருந்த இறையை, ஈசனை, நான் முன்னம் அறிந்ததில்லை, அவர் என் உள்ளே இருப்பதை நான் அறிந்து உணர்ந்து கொண்ட பின், அவர் எண்களுக்குள்ளும் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும். என்னுள் இருக்கும் இறையை , இருந்துணர்ந்து நான் உணர்ந்து கொண்டேன் என்கிறார் சிவவாக்கியர். அவர் பாடிய சிவவாக்கியம் நோக்கமே , அவர் உணர்ந்த எண்களையும், இறைவனையும், அண்டம், உயிர் …. அனைவருக்கும் அறிமுகப் படுத்துவதுதான்.

Related Posts