Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

5.ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

இந்த சடங்களான, உடல்கள் உருவாக காரணமான, விந்து ஓடி ஓடி நாதத்தில் உட்கலந்த சோ(தீ)யை , அதாவது விந்து நீரில், உயிர்கள், வேல் வடிவில், பாம்பு போன்று நீந்தி – நீந்தி நாதத்தில் உட்கலந்து நின்று , உருத்தரித்து உடல்களாகின்றது. அந்த சோதிமயமான , நம் உயிராகிய சோதியை இந்தப் பரந்த வெளியில், நம் பிண்டத்தில், நாடி நாடி நாடி நாடி அனேகம் பேர் நாட்களை கழித்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் , அதை (சோதியை) கண்டு பிடிக்க முடியாமல் வாடி வாடி வாடி வாடி மாண்டு போனவர்கள் கோடி கோடி கோடியே.

Related Posts