Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 92 – கடலிலே திரியும் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

92. கடலிலே திரியும் ஆமை, கரையிலேறி முட்டையிட்டு, கடலிலே திரிந்த போது, ரூபமான வாறு போல். மடலுலே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை, உடலுலே நினைந்து நல்ல உண்மையான துண்மையே!.

கடலிலே திரியும் ஆமை, கடல் நீரோட்டங்கள் கரையை தொடும் இடங்களில் முட்டையிடுவதற்கென்றே சில இடங்களை தேர்வு செய்து, ஆயிரக்கணக்கான ஆமைகள் மணலைத் தோண்டி முட்டை இட்டு மூடிவைத்து விட்டுச் சென்று விடும். அந்த முட்டை, மணல் சூட்டில் பொறிந்து ரூபமாகி விடும். மடலுலே என்றால் தந்தையின் விறைப்பையில் , இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை , நம் உடலுள்ளே முதுகுத் தண்டாக வளர்ந்து ரூபமாகி உள்ளது உண்மையான உண்மையே. இதுதான் ஆரம்பத்திலேயே, ஓடி ஓடி உட்கலந்த சோதியை என பாடி இருந்தார். அந்த சோதி தான் உடலில் எங்கே இருக்கிறது என தெரியாமல் நாடி நாடி எண்ணிறந்த கோடி பேர் அலைகிறார்கள் என்றார்.

Related Posts