Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

34. செய்ய தெங்கிலே இளநீர், சேர்ந்த காரணங்கள் போல், ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில் கொண்டனன். ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில், கொண்ட பின், வையகத்தில் , மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே!

தென்னை மரத்தில், தேங்காய் ஆவதற்காக, இளநீர் , அந்தக் காய்க்குள், புகுந்த காரணங்கள் போல், அந்த ஐய்யன், அதாவது இறைவன், என் உள்ளம் , புகுந்து கோயில் கொண்டு விட்டான். இங்கே, “என் உள்ளத்தில் தான் கோயில் கொண்டு விட்டான்” என்று கூறுகிறார். “என் உடலில் புகுந்து விட்டான்” என்று கூறவில்லை. உள்ளம் என்றால் நம் உடலுக்குள் தான். உள்ளதா? ‘ அவன் என் உள்ளத்தில் , கோயில் கொண்டு , விட்ட பின், என்னால், இறைவனை புரியாத, தவறாக புரிந்து கொண்டு இருக்கும், மாந்தர்கள் முன், வாய் திறக்க முடியவில்லை என்கிறார். ஏனென்றால், இறைவனைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் , அவர்கள் இல்லை என்று அவருக்குப் புரிந்ததால்.

Related Posts