Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 60 – மையடர்ந்த கண்ணினால் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

60.மையடர்ந்த கண்ணினால், மயங்கிடும் மயக்கிலே| ஐயிறந்து கொண்டு நீங்கள், அல்லல் அற்று இருப்பீர்காள், மெய்யடர்ந்த சிந்தையால், விளங்கு ஞானம், எய்தினால், உய் அடர்ந்து கொண்டு , நீங்கள் ஊழி காலம் வாழ்வீரே!

இப்பொழுதும், சித்தர்கள் என்றால், இல்லறத்தை ஏற்கமாட்டார்கள், என்ற தவறான, கருத்து இருக்கிறது. ஆனால் இந்த பாடலில், மையடர்ந்த கண்ணினால் மயங்கிடும், மயக்கம் என்பது, இறைவனால் உருவாக்கப்பட்டது. அதைக் கடந்து எப்படி , அல்லல் அற்று இருப்பது என்பதையும், கூறுகிறார். இந்த ஐந்து எழுத்தின் , விரிந்த கருத்துக்களை புரிந்து, இறைவன் நம்மை வழிநடத்துகிறான் , என்பதை உணர்ந்தால் அல்லல் இருக்காது. நம் சிந்தனை உருவாகும் இடமும், மெய்யில் தான் உள்ளது. அதாவது. மூளை. பயம், கோபம். கவலை, மகிழ்ச்சி எனும் உணர்வுகள் நமக்குத் தேவை. ஆனால் , எந்த உணர்விலும் தங்கினால் உடலுக்கு , வியாதிகள் வரும். உணர்வுகளை தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு விட்டு விட வேண்டும். சிந்தனை வேறு சித்தம் வேறு. சித்தம் என்பது, இந்த அண்டம், அகண்டம் பற்றிய , அத்தனை செய்திகளையும் கொண்டது. அது நம் உடலிற்கு அப்பால் ஆனால் இணைந்து (Link) இருக்கும். அதை நாம் அறிந்தால், அது நம்மை சரியாக வழிநடத்தும். அதை அறிவதுதான் முக்தி. உய்யம், குய்யம் என்பதை அறிய வேண்டும். உய்யம் என்றால் தலையின் உச்சியைதான் குறிப்பிடுவார்கள். குய்யம் என்றால் கீழே மூலத்தின் எரு வெளியேறும் வாய். அப்படி உச்சியில் உய் அடர்ந்த அந்த சித்தத்தால் நமக்குத் தேவையான செய்திகளை அடைந்து, ஊழிகாலம் வரை , இவ்வுலகில் இன்பமாக வாழ முடியும் என்கிறார்.

Related Posts