Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

104. ஓம் நமசிவாயமே , உணர்த்தும் மெய் உணர்ந்த பின், ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் தெளிந்த பின், ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் உணர்ந்த பின், ஓம் நமசிவாயமே, உட்கலந்து நிற்குமே!

ஓம் நமசிவாய என்று உச்சரிப்பது முக்கியமல்ல, அது உணர்த்தும் உண்மைகளை அறிந்து, உணர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். அதன் அளப்பறிய பறந்த பொருள்களை , உணர்ந்து அதை நம் உடம்பில் உணர்ந்து தெளிந்த பின், அந்த அளவுகடந்த சக்திகளை உணர்ந்து உண்மைகளை உணர்ந்த பின் அது நம் உடலிலும், மனதிலும், உட்கலந்து நிற்கும் என்கிறார்.

Related Posts