Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 179 – மனத்தகத்து அழுக்கறாத (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

179. மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள், வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார். மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

அகத்தில் எழும் எண்ணங்களில் மாசுக்களை அறுக்காமல் இருக்கும் மவுன ஞான யோகிகள், வனங்களில் சென்று அமைதியாக இறைவனை அடையலாம் என்று இருந்தாலும் அடைய முடியாது, பிறப்பு அறுக்கவும் முடியாது. ஆனால் அகத்தில் எழும் எண்ணங்களில் மாசுக்களை அறுத்த மவுன ஞான யோகிகள், குடும்பம் குழந்தைகள் என ஊருக்குள் இருந்தாலும் இறைவனை அடைந்து பிறப்பறுத்து இருப்பார்கள்.

Related Posts