Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 153 – அக்கிடீர் அனைத்து (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

153. அக்கிடீர் அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நிற்பது. முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்து விட்டது. மயக்கிடீர் பிறந்து இருந்து மாண்டு மாண்டு போவது, ஒக்கிடீர் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே !

சிவம், சக்தி எனும் பெரும் மலர்வால் உருவான அண்டத்தில் உருவான அ அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நின்று, மூன்று ஆதியான வெளி காற்று வெப்பம், ஆகியனவற்றால் மனம், புத்தி, சித்தம் எனும் முப்பொருளாகி நான் எனும் நினைவால் பிறந்து இருந்து மாண்டு மாண்டு போனது என இந்த உலகில் அதிலேயே மூழ்கி இருந்து விடாமல் நான் உரைத்த ஆழ் மனத்தில் அவனுடன் இணைந்து , உங்களுக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும் அவனிடம் விடைகளைப் பெற்று உணர்ந்து பார்த்தால் நான் உங்களுக்கு உணர்த்து வித்தது உண்மை என உங்களுக்கே புரிந்து விடும் என்கிறார்.

Related Posts