Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 170 – உதிக்கும் என்ற (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

170. உதிக்கும் என்ற தெவ்விடம் ? ஒடுங்குகின்ற தெவ்விடம்? கதிக்கு நின்ற தெவ்விடம் ? கண்ணுறக்கம் எவ்விடம் ? மதிக்க நின்ற தெவ்விடம் ? மதிமயக்கம் yஎவ்விடம்? விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!

கருத்துக்கள் உதிக்கும் இடம் எது? உயிர் ஒடுங்கும் இடம் எது? வாசியில் கதிக்கு நின்ற இடம் எது? கண்ணுறக்கம் அடையும் இடம் எது? அடுத்தவர்களை மதிக்க நின்ற இடம் எது? மதி மயங்கி நின்ற இடம் எது? என புருவ மத்தியை குறித்து விதிக்க வல்ல ஞானிகளை விரித்துரைக்க வேணும் என்கிறார். ஐந்து புலன்களும் இணையும் இடம், நான் எனும் எண்ணம் நிறைந்த இடம். தலையில் மூளையின் நடுவே புருவமத்தியின் உள்ளே உள்ள இடம் சிற்றம்பலம்.

Related Posts