Sidhariyal

முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

Sidhariyal

.

காற்று ஓட்டத்தையும், திசை மாறுவதையும் கவனித்தவர்களுக்குத் தெரியும் இப்பொழுது கற்று அடிக்காமல் தீபம் வைத்தால் நின்று எரியும். முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கு வைத்தால் அனையாமல் எரியும்.( வீட்டில் Fan இருப்பவர்களுக்கும் இது தெரிய வாய்ப்பில்லை). இதைத்தான் தீபாவளியாகக் கொண்டாடி இருக்கிறார்கள். கடந்த அமாவாசைக்குப் பிறகு காற்று தென்மேற்கிலிருந்து வடகிழக்காக இனிமேல் மாறும். அடுத்த மாதத்தில் இது நடக்காது. எனவே இந்த முடிந்த அமாவாசையைத்தான் தீபாவளியாக கொண்டாடி இருக்க வேண்டும். அடுத்த பெளர்ணமி கார்த்திகை தீபம். இது எப்படி மாறியது என்றால் நம் சூரியனுடைய ஒரு ராசி நகர்வால் தான். அது கடந்த 1800 ஆண்டுகளாக முதல் ராசியான மேசராசி , முதல் ராசியிலிந்து ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு திகிரி வீதம் 1800 ஆண்டுகளில் 30 திகிரி நகர்ந்து சென்று மேசராசி இரண்டாம் ராசி ஆகிவிட்டது. மீனம் முதல் ராசியாக 30 திகிரியும் உள்ளே வந்து விட்டது. அதனால் நிலாவும் ஒரு மாதம் 29.5 நாட்கள் சூரிய சுற்றால் பூமியுடன் சேர்ந்து நகர்ந்து ஒரு மாதம் பின் தங்கி விட்டது. அதனால் சரியாக ஒரு மாதம் பின்தங்கியதால் நிலவின் கணக்கு சரியாக வருகிறது ஆனால் ஒரு மாதம் பின் தங்கி. அதனால் முடிந்த அமாவாசைதான் தீபாவளி. அடுத்த பௌர்ணமி கார்த்திகை தீபம். அதனால் நாம் எல்லா பண்டிகைகளையும் ஒரு மாதம் முன்பாக கொண்டாடுகிறோம். திருத்தப்படாத நாள்காட்டியில் இந்த சூரிய நகர்வு இன்னும் 24.11 திகிரியிலேயே இருக்கிறது. ஆனால் 30 திகிரி சூரியன் நகர்ந்து விட்டது. இதை வானத்தில் எளிதாக கணித்து விடலாம். வானத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும் மீன ராசியும், எதிர் ராசியான கன்னி ராசியும் 30 திகிரியிலிருந்து அளவில் பெரியதாக இருக்கும். அதற்கு காரணம் இருக்கிறது.

Related Posts