Sidhariyal

தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

.

தமிழர்கள் நாட்காட்டி போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை ஒட்டிய பங்குனி அல்லது சித்திரையில் வரும் வளர்பிறை பிரதமையில் தான் சித்திரை – 1 ஆரம்பிக்கும். அவர்கள் கணக்குப்படி வருடத்திற்கு 365 என்று கிடையாது. அவர்களின் கடந்த வருடங்களில் உகாதி பண்டிகை நாட்களைப் பார்த்தால் அது புரியும். Green Concept அவர் சொன்ன மாதிரிதான் அவர்கள் நாட்காட்டி இருக்கும். ஆனால் நம் சித்தரியல் நாட்காட்டி சூரியனை அடிப்படையாக வைத்து , கதிர் திருப்ப நாள், சமநாள் இரண்டையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது. இந்த சம நாள் கதிர் திருப்ப நாள் என்றும் மாறாது. இதை மட்டும் கணக்கில் எடுத்தால் அது Solar Calender. பருவ நாட்காட்டி. ஆனால் சித்தரியல் நாட்காட்டி என்பது சம நாள, கதிர் திருப்ப நாள் மட்டும் கணக்கில் கொள்ளாமல் , சூரிய நகர்வையும் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டது. அதற்குத்தான் , ராசிகளும் நட்சத்திரங்களும் உருவாக்கப்பட்டு, அதன் இடையில் , நிலா, பூமி, சூரியன் , மற்ற கோள்களின் நகர்வுகளையும் கணித்தார்கள். சூரிய நகர்வையும் உள்ளடக்கியது தான் சித்தரியல் நாட்காட்டி.

Related Posts