நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா? (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா? ‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) என்றால் என்ன? பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்லச் சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக்கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தில் செங்குத்தாக இருக்கும். ஆக ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது, அந்த நாளையே நிழலில்லா நாள்'(Zero Shadow Day) என்கிறோம். எரட்டோஸ்தனஸ் (Eratosthenes) என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினாராம். எரட்டோஸ்தனஸ் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணிதவியலாளரும், புவியியலாளரும் வானியலாளரும் ஆவார். உலகின் புகழ்பெற்ற நூலகமாக விளங்கிய அலெக்சாண்டிரியா நூலகத்தின் தலைவராக இருந்தார். இவர்தான் முதன் முதலாக நிழலில்லா நாளை உலகிற்குக் கூறியவர் என்பர். இரண்டாண்டுகளுக்கு முன்புவரை நாம் கூட இதைக் கூறித்தான் மாணவர்களுக்குச் செயல்முறை விளக்கம் அளித்துவந்தோம். நமது அண்மைய ஆய்வின்படி கிரேக்கர்கள் நிழலில்லா நாளை முதலில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை எனத் தெரியவருகிறது. எப்படி எனச் சற்று விரிவாகப் பார்ப்போம். உலகின் அனைத்து நாடுகளிலும் நிழலில்லா நாள் வருமா? என்றால்… வராது… கடகரேகைக்கும்( Tropic of Cancer) மகரரேகைக்கும்(Tropic of Capricorn) இடையில் உள்ள நாடுகளில் மட்டுமே இந்நிகழ்வைக் காண முடியும். மேலும், இந்நிகழ்வு அனைத்து இடங்களிலும் ஒரேநாளில் நிகழாது. சூரியனின் வடசெலவு நாட்களில் ஒருநாளும், தென்செலவு நாட்களில் ஒருநாளும் என ஆண்டிற்கு இருமுறை நிகழும். அதுவும், சரியான மதிய நேரத்தில்தான் (Local Noon) நிழல் பூஜ்ஜியமாகும். எரட்டோஸ்தனஸ் வாழ்ந்த பண்டைய கிரேக்கம் கடகரேகையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது, எனவே, அங்கே நிழல் பூஜ்ஜியமாகாது. நிழல் பூஜ்ஜியமாகாதப் பகுதியில் வாழ்ந்த ஒருவருக்கு நிழல் பூஜ்ஜியமாவது குறித்த சிந்தனை “முதன் முதலில்” எவ்வாறு வந்திருக்கும்? அதை அவர் மற்றவர்களிடமிருந்து கற்றிருக்க வேண்டும். இவர் இருந்த அலெக்சாண்டிரியாவில்தான் நிழல் பூஜ்ஜியமாகாது, கடகரேகையை ஒட்டியிருந்த எகிப்தின் சைன் (இன்றைய அஸ்வான்) நகரில் நிழல் பூஜ்ஜியமாகும் அதுவும் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே. அந்நாளில் அலெக்சாண்டிரியாவில் நிழலின் நீளத்தை அளந்து அதன் மூலம் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார் என்பார்கள். அது சரியாகக் கூட இருக்கலாம், ஆனால் நிழல் பூஜ்ஜியமாவது குறித்த சிந்தனை கடக, மகர ரேகைகளுக்கு இடையே வாழ்ந்த மக்களுக்குத்தான் “முதன்முதலில்” வந்திருக்க வேண்டும் என்பதுதானே இயல்பு? தமிழ்நாடானது கடக, மகர ரேகைகளுக்கு இடையே அமைந்துள்ள நிலப்பரப்பாகும். இங்கிருந்து சூரியனின் கிடைமட்ட நகர்வான வட, தென் செலவுகளை நன்றாகக் கவனிக்க முடியும். இப்பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நிழல் பூஜ்ஜியமாகும், எனவே இங்கிருந்து நிழலில்லா நாளை கண்டுபிடிப்பது எளிது. சரி… கண்டுபிடித்தார்களா…? இங்குள்ள கோயில்களும், அரண்மனைகளும் சிற்ப நூலின் மரபு பிசகாமல் அமைக்கப் பெறும். இவற்றை அமைக்கும் போது நாள், நாழிகை இவற்றுடன் சரியான திசைகளையும் அறிய வேண்டும். அதற்காக நிழல் பூஜ்ஜியமாகும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோயிலோ, அரண்மனையோ அமைக்கப்பட வேண்டிய நிலத்தில் குச்சியொன்று நடப்பட்டு அதனைச் சுற்றி வட்டமிடப்படும். காலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில் குச்சியின் நிழல் மேற்கே விழும். குச்சி நுனியின் நிழல் வட்டத்தில் விழும்போது அப்புள்ளி குறிக்கப்பட்டு முளையொன்று அடிக்கப்படும். அதேபோல் மதியத்திற்குமேல் குச்சியின் நிழல் கிழக்கே இருக்கும். ஏற்கனவே செய்ததுபோல குச்சியின் நுனியின் நிழல் வட்டத்தின் மீது விழும் புள்ளி குறிக்கப்பட்டு மற்றொரு முளையொன்று அடிக்கப்படும். இப்போது முளையடிக்கப்பட்ட குச்சிகள் கிழக்கு, மேற்கைக் குறிக்கும். சித்திரை மாதத்தில் சூரியன் தலைக்கு நேர் மேலே வரும்போது அக்குச்சிகள் இரண்டும் சரியானத் திசையைக் குறிக்கும். இப்போது கிழக்கு, மேற்குத் திசை அறியப்பட்டுவிட்டது. இக்கோட்டிற்கு செங்குத்தாக நடுக்குச்சி வழியே ஒரு கோடு வரைந்தால் அக்கோடு சரியான தெற்கு, வடக்கைக் குறிக்கும். இவ்வழக்கம் சங்கு ஸ்தாபனம் என்ற பெயரில் இன்றும் கோயில் கட்டப்படும்போது பின்பற்றப்பட்டு வருகிறது. கோயில் சிற்பக் கலைக்கு திசையறிதல் இன்றியமையாதது. திசைகளை வானியல் மூலமே அறியமுடியும். நிழலில்லாத நாள் எனப்படும் Zero Shadow Day என்பதைப் தமிழர்கள் அறிந்திருந்தனரா? என்றால், ஆமாம். அந்நாளிலேயே மேற்கூறிய திசையறியும் செயல்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1